WHAT'S NEW
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையிவாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு !
ACCESSORIES
புளியம்பொக்கனை பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு
நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது
WINDOWS PHONE
போரதீவுப்பற்றில் நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!
LATEST ARTICLES
முகநூல் பாவிப்பவர்கள் அவதானம் இங்கிலாந்து அண்ரசனிடம் 29 இலட்சத்தை இழந்த யாழ் வாசி…
முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில் பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். இவர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார். 2024 மே 31 ல் எனது முகவரியை கேட்டார். முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் அதற்கு எனது முகவரி தேவை எனக் கேட்டார். இதனடிப்படையில் நான் எனது முகவரியை What’s app ல் அனுப்பினேன். மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் […]
யாழ்.செயலாளரின் மகனில் ஆள்மாற்றம்! அண்ணன் மதுபோதையால் தம்பியார் கைதாம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் வாகனத்தை செலுத்திச் சென்று விபத்துக்குள்ளானவர் அவரது மூத்த மகன் என்றும் தற்போது பொலிஸாரினால் மதுபோதை பலூன் பரிசோதனை, வாக்குமூலம் பெறப்பட்டது இளைய மகன் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய வருகுறது. ஆளும் கட்சி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர் என்று அந்த தகவல்கள் குறிப்பிட்டன. இந்த நிலையில் இளைய மகனை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ பதவிநிலை பெயர்பலகை கொண்ட வாகனம் விபத்துக்குள்ளாகியது. வாகனம் விபத்துக்குள்ளான போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனோ அவரது சாரதியோ பயணிக்கவில்லை என்று நேரில் கண்டவர்கள் உறுதிபடுத்தியதுடன், வாகனத்தை அவரது மூத்த மகனே செலுத்தினார் என்றும் கூறினர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபுறத்திலிருந்த மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தின் போது வீட்டின் முன்பாக […]
யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் மூவர் கைது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. தொடரூந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தொடரூந்தில் சென்ற ஒருவர் தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் வீடியோவில் பதிவாகியது. ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து யாழ்ப்பாண ரயில் நிலையமும் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 15 -13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது […]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் கர்ப்பமான விடயத்தை மறைத்து வயிற்றுவலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர்கள் சோதனையிடாது, வயிற்று வலிக்கான ஊசி மூலமான வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த மாணவி மலசலகூடத்திற்கு சென்ற நிலையில், குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார். குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர். பின்னர் […]
யாழ் செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது!
போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து சென்ற குறித்த பெண், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என […]
யாழில் அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்..!
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை காரணமாக பழ வியாபாரத்தில் சிறுவன் ஒருவன் ஈடுபட்டு , வருமானத்தை ஈட்டி தனது குடும்பத்தினை பார்த்து வருகின்றான். அச்சிறுவனிடம் யாழ் . மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகஸ்தர் ஒருவர் வரி அறவீடு செய்யாது , சிறுவனை மிரட்டி பழங்களை லஞ்சமாக பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் பழங்களை கொடுக்க மறுத்துள்ளான். அந்நிலையில் சிறுவன் சட்டவிரோதமான முறையில் பழ வியாபாரம் செய்வதாக கூறி சக உத்தியோகஸ்தர்களுடன் சென்று , சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்துள்ளார். அதன் போது சிறுவனையும் தாக்கியுள்ளனர். சிறுவனின் பழங்களை […]
கொட்டாஞ்சேனையில் மடக்கி பிடிக்கப்பட்ட கொலையாளிகள் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் […]
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!! கொலையாளிகள் மடக்கி பிடிப்பு
கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் உட்பட இராணுவத்தினர் விரைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சுவிஸ் குமார் தப்பிக்க உதவியமை – லலித் ஜெயசிங்க, ஸ்ரீகஜனுக்கு 4 ஆண்டுகள் சிறை
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு வந்த போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற […]
தனது சாரதியை கழுதை என அழைத்த பிரதி அமைச்சர்…!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு நேற்றையதினம்(19.02.2025) வருகை தந்த பிரதி அமைச்சர், தனது வாகனத்தை வரவழைக்கும் போதே இவ்வாறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரின் முன் சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.