Home JAFFNA NEWS அருச்சுனா கைது

அருச்சுனா கைது

94
0

நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது.

அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அருச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய  வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அருச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று காவல்துறையினருக்கு கட்டளையிட்டு இருந்தது.

இந்நிலையில், அநுராதபுர காவல்நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு  சென்று யாழ்ப்பாணத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து , அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.