Home LOCAL NEWS எம்பியின் வாகனம் விபத்து : ஒருவர் பலி – எம்பியின் சகோதரர் கைது

எம்பியின் வாகனம் விபத்து : ஒருவர் பலி – எம்பியின் சகோதரர் கைது

50
0

வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.