Home LOCAL NEWS சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு !

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு !

36
0

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியான செய்தி போலியானது எனவும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக வலுவூட்டல் செயற்றிட்டங்கள் தொடர்பான தரவுகளை புதுப்பித்தல் செய்து வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை தற்போதுள்ள 7000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்க அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.