கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாகவே துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது
மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்தவர்கள் மீதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுகிலக்கான நிலையில் இருவர் உயிரழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.