ஹபரணை திருகோணமலை பிரதான வீதியில் பேரூந்தும் டொல்பினும் நேருக்கு நேர் மோதிய பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிக்கப்படுகின்ற அதே வேளை பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களுள் வேனை செலுத்திய கிண்ணியா பகுதியை சேர்ந்த இளைஞரும் உள்ளடங்குவதோடு பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளார்
இன்று(01) முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.