தற்போது போலியான பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பறிக்கை ஒன்றினை விட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வரும் செய்தியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் எனவும் பரப்பப்பட்டு வரும் அச்செய்திக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிருக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை எனவும் இது திட்டமிடப்பட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது சேறு பூசுகின்ற ஒரு செயற்பாடு.
இது ஒரு கையாலாகாத்தனம் எனவும் இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இவ் போலிப் பிரசுருத்திற்கு பின்னணியில் அர்ச்சுனா இராமநாதன் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.