தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை செய்து வருகிறோம். இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார். விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால், பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன […]