Home Authors Posts by Rishi

Rishi

Rishi
139 POSTS 0 COMMENTS

APPLICATIONS

HOT NEWS

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்!!

0
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர். வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மத்திய காலத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது