Home Authors Posts by Rishi

Rishi

Rishi
144 POSTS 0 COMMENTS

APPLICATIONS

HOT NEWS

தனது சாரதியை கழுதை என அழைத்த பிரதி அமைச்சர்…!

0
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு நேற்றையதினம்(19.02.2025) வருகை தந்த பிரதி அமைச்சர், தனது வாகனத்தை வரவழைக்கும் போதே இவ்வாறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரின் முன் சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.