ʟɪꜰᴇꜱᴛʏʟᴇ

Home ʟɪꜰᴇꜱᴛʏʟᴇ

APPLICATIONS

HOT NEWS

16 வயது மாணவிக்கு பாலியல் வீடியோ காண்பித்து, துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

0
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 16 வயது மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான ஆசிரியையை மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நிமாலி மந்திரிநாயக்க உத்தரவிட்டார். மொரட்டுவ கல்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளார். கல்தமுல்லவில் உள்ள தனது வீட்டில் மேலதிக வகுப்பு நடத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துள்ளார். இதன்போது தகாத காணொளிகளை காண்பித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோருடன் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய ஆசிரியை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.