LOCAL NEWS

Home LOCAL NEWS

APPLICATIONS

HOT NEWS

கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

0
குருநாகல் – மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில், கணவனால் ஆயுதத்தால் தாக்கப்பட்ட மனைவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் – பன்சியகம 7ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான கணவன் குறித்த பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.