LOCAL NEWS

Home LOCAL NEWS Page 3

APPLICATIONS

HOT NEWS

யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. தொடரூந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தொடரூந்தில் சென்ற ஒருவர் தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் வீடியோவில் பதிவாகியது. ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து யாழ்ப்பாண ரயில் நிலையமும் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 15 -13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது […]