தரமற்ற மருந்து; கடந்த ஆட்சியில் பார்வையிழந்த 17 பேருக்கு இழப்பீடு
கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். “நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பார்வையிழந்த 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்திற்கு இதுபோன்று இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம். அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் […]
பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்!!
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று (06.01.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் – ஐவர் கைது
யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய்ப் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் காவல்துறையினரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர் நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் ஐவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் !
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். வாரிசுகள் இல்லாமல் ஆசிரியர்களால்என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை இடமாற்றம் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்டபின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. எனினும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை, நீண்ட காலமாகப் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த […]
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது
கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு நபரொருவர் தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார். இதனையடுத்து அவர் அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார். அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர். அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்க, “இப்போது உங்களது நகைகளை தரமுடியாது ஏன் […]
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எதிா்வரும் ஒக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனினும் அடுத்த பிரதமர் தோிவு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு இனி ஆப்பு!
வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் அவர்கள் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி (அலைந்து திரியும்) மாடுகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் 2025.01.07 ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்திற்கு வட மாகாணம் முழுவதும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக எச்சரிக்கை வழங்கப்படவுள்ளது. அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டும் கருத்தில் கொள்ளாத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய குழு
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன், அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன். இரண்டு நாட்கள் கடந்த நிலையில், குறித்த வீதியில் செல்லும்போது வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில், அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா […]



















