சஞ்சீவ கொலை – பிரதான சந்தேகநபர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான கொலையாளி நீதிமன்றத்தில் உள் நுழைய பயன்படுத்தப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டை,தப்பிக்க பயன்படுத்ப்பட்ட வாகனம் ஆகியவற்றோடு புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவவை சுட்டு படுகொலை செய்த பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற சம்பவத்தினை தனக்கு சாதகமாக்க முற்பட்ட கோமாளி எம்பி
பாராளுமன்ற அமர்வு நிறைவுற்றதும் தாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு யாழ். மாவட்ட எம்.பி அர்ச்சுனா இராமநாதன் இன்று (19) சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பு நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நான் யாழ்ப்பாணத்தில் இரண்டு நபர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன். அந்த வகையில் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். அதனால் பொது அமர்வு காலத்திலாவது எனக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் நான் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். இது முக்கியமான விடயம் என்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன்போது சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சாபாநாயகர், அந்த வேண்டுகோளை […]
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக்காக வந்தவர்கள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர்??
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கனேமுல்ல சஞ்சீவ பிரதிவாதி கூண்டிலிருந்து இறங்கத் தயாரான போது, குறித்த நபர் சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் […]
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு! கனேமுல்ல சஞ்சீவ பலி!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் கொலையாளி தப்பி ஓடியதாகவும் தெரிய வருகின்றது.
ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் பொலிஸார்??
ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் பொலிஸார் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர் ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்று வரும் நிலையில், பளை பகுதியில் வைத்து வாகனத்தின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடையோரின் வன்முறை செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்றைய […]
06 வயது மகளையும் தந்தையும் பலி கொண்ட துப்பாக்கிச்சூடு
நேற்றிரவு மித்தெனிய பொலிஸ் பிரிவில் கடவத்த சந்தியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் 39 வயது தந்தையும் 06 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்பொத்த பகுதியைச்சேர்ந்த அருணா விதானகம என்கிற கஜ்ஜா என்பவரே சம்பவம் நடந்த நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும் இவரது மகனும் மகளும் காயமடைந்துள்ள நிலையில் மகள் தங்காலே வைத்தியசாலையிலும் மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி 6 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபர்களைக்கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளர் பலி : நீர் வேலியில் துயரம் !
சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் , ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது . இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார் . சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
36 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் கைது !
சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து நேற்று (15) இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர் 36 வயதான கனேடியப் பெண் என்றும், அவர் கடுமையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ 500 கிராம் “ஹாஷிஷ்” போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த “ஹஷிஷ்” போதைப்பொருள் கையிருப்பு வேறு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்காக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு […]
யாழில் தீயில் கருகிய தமிழினி சிகிச்சை பலனின்றி பலி
சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி மரணமானார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமானார்.