நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விபத்துக்குள்ளான நிலையில் யாழ் . போதனாவில் அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வாகனம் பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்
காதல் தொடர்பிலிருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை, கிட்டங்கி வீதியைச்சேர்ந்த மதியழகன் சஞ்சய் (வயது-24 ) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டிலிருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரமே இத் தற்கொலைக்கு காரணமென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன், மூச்சுக்குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாகக்குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் தொலைபேசியூடாக வெளிநாடொன்றிலுள்ள யுவதியொருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில், […]
எம்பியின் வாகனம் விபத்து : ஒருவர் பலி – எம்பியின் சகோதரர் கைது
வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர், 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர்
மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்தார். இந்த வைத்தியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய தேவையான அனைத்து தகுதிகளையும் ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாக அவர் கூறினார். இதற்கிடையில், நாட்டில் உள்ள மருத்துவ ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பொருளாதாரம் நிலையானதாக இருக்க வேண்டும், அரசாங்கம் குறுகிய கால தீர்வுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், வரவு செலவுத் திட்டம் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் விஜேசிறி கூறினார்.
13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது !
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, பொலிஸ் விசாரணையின் பின்னர் மகளை அடித்து துன்புறுத்த கூடாது என தாய்க்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11) இரவு , தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் , அதனால் தான் உயிரை மாய்க்க போவதாகவும் மகள் தனது தந்தையின் சகோதரிகளுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து, பிள்ளையின் தந்தையின் சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாருடன் […]
குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதி !
பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பான போத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதை அருந்திய பின்னர் திடீர் சுகவீனமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குளிர்பானத்தை குடித்த பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக 8 வயது சிறுமி நேற்று (12) மதியம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுகயீனத்திற்கான காரணத்தை அறிவதற்காக, சிறுமியின் தந்தையும் குளிர்பானத்தில் இருந்து சிறிது குடித்திருந்தார். பின்னர் அவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிறுமியும் அவரது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பானத்தை குடித்த பிறகு, அவரது வாய் எரிவது போல் உணர்ந்ததாக தந்தை குறிப்பிட்டார்.
யாழில் காதலர் தினத்தைக் கொண்டாட காதலி மறுப்பு : உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்
காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன் என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பல முறை கேட்டிருந்தார். ஆனால், அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த இளைஞன் பலமுறை வற்புறுத்தியதால், அப்பெண் இளைஞன் மீது கோபமடைந்துள்ளார். இதனால் அந்த இளைஞன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த நாளில், அவ்விளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால், பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனவுளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை அருகில் வைத்துக்கொண்டு அர்ஜுனா தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்
யாழ்ப்பாணம் வலம்புரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது, எம்.பிக்கும் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சபையில் கூச்சலிட்ட அர்ச்சுனா! அர்சுனா எம்பிக்கு மண்டைப் பிழை!! பாராளுமன்றில் பெரும் சல சலப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரையினால் சபை கடுமையான குழப்ப நிலையை அடைந்துள்ளது. அவர் சில,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் விமர்சித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பேசும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும் , இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை […]
போலிச் செய்தி பகிர்வின் பின்னணியில் அர்ச்சுனாவா?
தற்போது போலியான பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பறிக்கை ஒன்றினை விட்டுள்ளார். சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வரும் செய்தியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் எனவும் பரப்பப்பட்டு வரும் அச்செய்திக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிருக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை எனவும் இது திட்டமிடப்பட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது சேறு பூசுகின்ற ஒரு செயற்பாடு. இது ஒரு கையாலாகாத்தனம் எனவும் இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இவ் போலிப் பிரசுருத்திற்கு பின்னணியில் அர்ச்சுனா இராமநாதன் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.