இளைஞர்களிடையே பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி “குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.” 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு […]
வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி!
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (02.02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தடவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
நாடளாவிய ரீதியில் சிக்கன்குனியா பரவும் அபாயம் !
நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, மூக்கைச் சுற்றி கருப்பு நிறமாற்றம் போன்றவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் விரைவில் மருத்துவமனைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். டெங்குவை பரப்பும் அதே கொசுதான் சிக்குன்குனியாவையும் பரப்புகிறது எனவே கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பது மிகவும் அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு !
திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் கடற்கரையில் கடந்த 30 ஆம் திகதி நீராடுவதற்கு நண்பர்களுடன் சென்றிருந்த 20 வயதுடைய இளைஞன், அலையில் சிக்குண்டு காணாமற் போயிருந்தார். குறித்த இளைஞன் கடலில் மூழ்கியபோது ஏனையோர் அவரை காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிய குறித்த அனைவரையும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தேடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை – சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தும் வேனும் மோதி விபத்து -இருவர் பலி! 35 பேர் காயம்
ஹபரணை திருகோணமலை பிரதான வீதியில் பேரூந்தும் டொல்பினும் நேருக்கு நேர் மோதிய பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிக்கப்படுகின்ற அதே வேளை பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களுள் வேனை செலுத்திய கிண்ணியா பகுதியை சேர்ந்த இளைஞரும் உள்ளடங்குவதோடு பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளார் இன்று(01) முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஆசிரியர் கொடூரமான முறையில் கொலை ; தாயார் கைது !
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், அவரது 36 வயது மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். நேற்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 33 வயது திருமணமாகாத பாடசாலை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு எழுதியதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கடிதத்தைக் கண்டுபிடித்தனர். அதில் அவர் தனது மகளைக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக […]
ஜனாதிபதி செயலக வாகனம் விபத்து – நால்வா் காயம்
தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களின் சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கை காவல்துறைப் பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்ககலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தொிவித்துள்ள தலாவ காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மனைவியின் கள்ளக்காதலனை கொலை செயத கணவன் !
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண் நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலையைச் செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக […]
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் !
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருச்சுனா கைது
நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அருச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அருச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று காவல்துறையினருக்கு கட்டளையிட்டு இருந்தது. இந்நிலையில், அநுராதபுர காவல்நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று யாழ்ப்பாணத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து , அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.