பாடசாலை ஆசிரியர் கொடூரமான முறையில் கொலை ; தாயார் கைது !
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், அவரது 36 வயது மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். நேற்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 33 வயது திருமணமாகாத பாடசாலை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு எழுதியதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கடிதத்தைக் கண்டுபிடித்தனர். அதில் அவர் தனது மகளைக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக […]
ஜனாதிபதி செயலக வாகனம் விபத்து – நால்வா் காயம்
தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களின் சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கை காவல்துறைப் பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்ககலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தொிவித்துள்ள தலாவ காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மனைவியின் கள்ளக்காதலனை கொலை செயத கணவன் !
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண் நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலையைச் செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக […]
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் !
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருச்சுனா கைது
நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. அந்நிலையில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அருச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அருச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று காவல்துறையினருக்கு கட்டளையிட்டு இருந்தது. இந்நிலையில், அநுராதபுர காவல்நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று யாழ்ப்பாணத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து , அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.
வாக்குவாதத்தின் போது காதலனை கத்தியால் குத்திய காதலி : காதலன் பலி !
புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுஜித் பிரதீப் குமார (31) என்பவரே உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருமணமானவர், ஒரு குழந்தையின் தந்தை என்றும், அவரது மனைவி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இறந்தவர், சந்தேக நபரான அந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த பெண், வெல்லவாய, கொட்டவெஹெர பகுதியில் வாடகைக்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தனது காதலியின் விடுதி அறைக்கு பலமுறை சென்றிருப்பதும், சம்பவம் நடந்த நாளில், விடுதி அறைக்குச் சென்றபோது, அவரது காதலி புதிய வேலைக்கான நேர்காணலுக்கு ஆஜராகப் போவதாகக் கூறியதும் தெரியவந்தது.
காதலால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி !
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஞாயிற்றுக்கிழமை (26) இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவ தினம் பிரதேசத்திலுள்ள இவ்விரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி கிராம சேவையாளர்ரின் தலைமையில் இப்பகுதியில் உள்ள பிரதான வீதியொன்றை “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது சுமார் 100 பேர் கலந்து கொண்ட இச்சிரமதானத்தில் பெரும்பான்மை இன பெண் ஒருவரை காதலித்த தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் அந்த பெண்ணின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் . இவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை […]
கைதான யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள ரூ.3 1/2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார். இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் […]
மது போதையில் பாதசாரி கடவையில் வயோதிப் பெண்ணை மோதிய தள்ளிய பொலீஸார்
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. முற்பகல் வேளையில் அதிக மது போதையில் உந்துருளி செலுத்தி வந்த பொலீஸார் குறித்த வயோதிப பெண் பாதசாரி கடவையில் கடந்து செல்வதனை கூட அவதானிக்காது வாகனத்தை செலுத்தியதன் காரணமாக குறித்த பெண் மோதுண்ட நிலையில் வீதியில் தூக்கி எறியப்பட்ட நிலையில் தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றத்தின் முன்னான துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்!
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன்,பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவற்துறையினர் தொடர்ச்சியாக சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை(23.01.25) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் […]



















