வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி !
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று செம்மண்ணோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த தகராறு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யோஷித ராஜபக்ஷ கைது தொடர்பான மேலதிக விபரங்கள் !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார். இந்நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
பதியாத தொலைபேசிகள் பற்றி முக்கிய அறிவிப்பு – கடுமையான தண்டனை என எச்சரிக்கை
நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அதன் இயக்குநர் ஓய்வு பெற்ற ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார். வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதற்கமைய, தற்போது செயலில் உள்ள தொலைபேசிகளின் IMEI எண்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவை எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் செயலில் இருக்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு IMEI எண்கள் பதிவு செய்யப்பட்ட வலையமைப்புகளுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று இயக்குநர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.
சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலியின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு கோரி இன்று மதியம் பொதுமக்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை வேண்டும் என எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்று சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் முஹமட் இஸ்மாயில் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது எனவும் இவ்விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் எம்பி சுகாதார அமைச்சரை பாராளுமன்றத்தில் வைத்து […]
வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை
வவுனியா, சுந்தரபுரத்தில் வியாழக்கிழமை (23.01) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்த குறித்த நபர் கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் இரவு 11:30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது !
வவுனியா ஓமந்தை A9 வீதியில் 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அதேவேளையில் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப்பிடித்துள்ளனர். கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு WTC இல் விசித்திர திருடன் – பேஸ்புக்கை ஆராய்ந்த போது அம்பலமான விடயங்கள்
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் ‘பேட்மேன்’ என்று சுவர்களில் எழுதப்பட்ட ஒரு குறிப்பின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 26வது மாடியில் அமைந்துள்ள நான்கு அலுவலகங்களில் கடந்த 17 ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நுணுக்கமான விசாரணையின் முடிவில், சந்தேக நபரால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட மூன்று மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களை பொலிஸாரினால் மீட்க முடிந்தது. விசாரணையின் போது, திருட்டுகள் நடந்த ஒவ்வொரு அலுவலகத்தின் சுவர்களிலும் ‘BAT MAN’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதன்படி, உலக வர்த்தக மையத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை […]
ஏழாலை இளம் குடும்பஸ்தரிடம் இரண்டு லட்சம் ரூபா மோசடி: மக்களே அவதானம்!
யாழ்.ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21.01.2025) இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து ஏமாற்றி இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல்-01.15 மணியளவில் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நபர் தாங்கள் டயலொக் ஒவ்விசிலிருந்து கதைக்கிறோம். போன வருஷம் டிசம்பர் மாதம்-21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன் நீங்கள் மெசேஜ் பார்க்கவில்லையா? எனவும் வினாவியுள்ளான். அதற்கு அப்படியொரு தகவலை நான் பார்க்கவில்லை என இளம் குடும்பஸ்தர் பதில் வழங்கியுள்ளார். நீங்கள் மெசேஜ்கள் டிலிற் பண்ணியிருக்கிறீர்களா? என வினாவப்பட்ட போது அதற்கு இளம் குடும்பஸ்தர் ஆம் எனப் பதில் வழங்கியுள்ளார். இந் நிலையில் மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதால் தான் தற்போது உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளதாகத் […]
பொலிஸ் அதிகாரிகள் மது அருந்திவிட்டு தூங்குவதைக் காட்டும் வீடியோ : விசாரணை ஆரம்பம் !
பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் குடிபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது. இந்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்
யாழில் 14 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்!! 52 வயது ஆசிரியர் கைது!!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் , மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


















