ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப சாவு !

0
Screenshot 2025 01 23 12 21 49 534 com.facebook.katana edit.jpg

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் , யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன் , வீதியில் மாடுகளை கூட்டி சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , மாடுகளை சாய்த்து சென்ற இளைஞனும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாடுகளை சாய்த்து சென்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து […]

மனதை உருக வைக்கும் சம்பவம்

0
1001191068.jpg

காஸாவில் தரைப்படை நடவடிக்கையின் தொடக்கத்தில், 13 வயதான ஆயா அலி அல்-டப்பா, இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார். டெல் அல்-ஹவாவில் உள்ள ஒரு தங்குமிடம் பள்ளியில் குடிநீரை நிரப்பும் போது, இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரரால் மார்பில் சுடப்பட்டு உடனடியாக இறந்தார். அவளது உடல் கவனமாக மூடப்பட்டு, போர்வையால் மூடப்பட்டு, குறைந்தது 1 மீட்டர் ஆழமுள்ள கல்லறையில் புதைக்கப்பட்டு, பள்ளி மேசைகள் மற்றும் கான்கிரீட் அடுக்குகளால் வலுப்படுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேலியப் படைகள் பள்ளியை முற்றுகையிட்டன, கடுமையான தீ மற்றும் குண்டுவெடிப்பின் கீழ் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது. ஞாயிற்றுக்கிழமை, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, அவரது குடும்பத்தினர் புதைக்கப்பட்ட இடத்திற்குத் திரும்பினர், ஆனால் சிதறிய எச்சங்களை மட்டுமே கண்டனர்.

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்!!

0
Screenshot 2025 01 23 12 05 55 494 com.facebook.katana edit.jpg

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர். வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மத்திய காலத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை !

0
24 66beb83303e22.jpg

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் சனிக்கிழமை(25) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 வயது சிறுமி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது !

0
5hg.jpg

பத்தாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான 17 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாகியிருந்த தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர், வழக்கறிஞருடன் பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்தபோது, புதன்கிழமை (13 ) கைது செய்யப்பட்டள்ளார் என சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவத்தனர். முத்துகண்டிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் பணிபுரியும் இந்த 55 வயதான ஆசிரியர், சியம்பலாண்டுவ நகரில் ஒரு தனியார் வகுப்பை நடத்தி வருகிறார். அந்த வகுப்புக்கு வந்திருந்த மாணவியையே அந்த ஆசிரியர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் தனது தாயாரிடம் அந்த மாணவி தெரிவித்தார். அதனையடுத்து, சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசிக்கிறார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் முயற்சித்த போதிலும், அவர் அப்பகுதியை விட்டு தப்பியோடி தலைமறைவாகி இருந்தார். தப்பி ஓடிய அவர், ஒரு வழக்கறிஞர் மூலம் […]

2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் – பலர் காயமடைவு

0
1737274762 1737263304 acc.jpg

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 வயது மாணவிக்கு பாலியல் வீடியோ காண்பித்து, துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

0
kandy to katunayake internatio.jpg

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 16 வயது மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான ஆசிரியையை மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நிமாலி மந்திரிநாயக்க உத்தரவிட்டார். மொரட்டுவ கல்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளார். கல்தமுல்லவில் உள்ள தனது வீட்டில் மேலதிக வகுப்பு நடத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துள்ளார். இதன்போது தகாத காணொளிகளை காண்பித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோருடன் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய ஆசிரியை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம் !

0
22 63a9798f29316.jpg

2025 ஆம் ஆண்டில் சிறந்த 25 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த சுற்றுலா இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியான “BBC Travel” இதனை அறிவித்துள்ளது. உலகின் சிறந்த சுற்றுலா இடங்கள் என “BBC Travel” வெளியிட்டுள்ள 25 இடங்களைக் கொண்ட பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் உள்ளது. BBC Travel ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (United Nations World Travel Organization,), சர்வதேச நிலையான சுற்றுலாதுறை (Sustainable Travel International) மற்றும் உலக பயணம் மற்றும் சுற்றுலா சபை (World Travel & Tourism Council-WTTC) போன்ற முன்னணி நிலையான பயண அமைப்புகளின் ஆலோசனையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. படர்ந்த மலை உச்சியிலுள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் மற்றும் நீர் சறுக்கல் போன்ற அம்சங்களுடன் பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத பயண அனுபவங்களை வழங்கும் […]

காதலன் கதைக்கவில்லை – ரயில் முன் பாயந்த யுவதி உயிரிழப்பு

0
FB IMG 1737186800615.jpg

பல வருட காதலன் ஜப்பான் சென்ற பின்னர் தன்னைப் புறக்கணித்ததால் விரக்தியடைந்த இளம் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் குட்ஷெட் சாலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 33 வயதான மெரினா பாலேரின் பெர்னாண்டோ என்பவரே இந்த விபரீத முடிவை எடுத்தார்.இந்த இளம் பெண் கடந்த 6 ஆம் திகதி முந்தல் சரணகம பகுதியில் புத்தளத்திலிருந்து கல்கிஸ்ஸை நோக்கிச் செல்லும் அலுவலக ரயிலில் குதித்துள்ளார். பலத்த காயமடைந்த அந்த இளம் பெண், சிலாபம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த யுவதி நடத்திய முன்பள்ளி புத்தளம் நகருக்கு அருகில் அமைந்திருந்தது. இந்த முன்பள்ளியும் 2024 இல் தொடங்கப்பட்டது. அவருடைய காதலன் கேகாலையைச் சேர்ந்த ஒரு இளைஞன். இருவரும் பல வருடங்களாக உறவில் இருந்தனர். […]

மன்னார் துப்பாக்கிச் சூட்டு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை !

0
1737168362 mannar 2.jpg

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக் கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். ‘மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது. முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இறுதியாக வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாக இடம் […]