யாழில் அதீத போதையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள்.!
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து , மாணவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் , மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸார் அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் !
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொாடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சடலமானது பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையிவாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு !
மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (18) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் கரையை அடைந்ததை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நீதிமன்றத்தின் அனுமதியை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
K-2-Sit – குறித்து அபாயகரமான தகவல் – இளைஞர்கள் மாணவர்களை குறிவைப்பு
இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் செயற்கை மரிஜுவானா அல்லது “K-2-Sit” என்ற போதைப்பொருள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த செயற்பாட்டை உடன் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ் தலைமை அதிகாரிகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த போதை மருந்துகள் உடலில் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், மக்களை மிகவும் மோசமான மனநிலை பாதிப்பிற்கு உள்ளாக்குவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச் செல்லக்கூடிய நபர்கள் மற்றும் இடங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு !
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தல தலத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்கள் மீதே துப்பாக்கி சூடு !
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாகவே துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்தவர்கள் மீதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுகிலக்கான நிலையில் இருவர் உயிரழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டில் அரசின் செலவு 4,616 பில்லியன் ரூபாய் (முழு விபரம் இணைப்பு)
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு அமைய மொத்த செலவின விவரங்கள் பின்வருமாறு பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் புதுப்பித்தல் – 8.3 பில்லியன் ரூபா நிதி மூலதனம் – 5.4 பில்லியன் ரூபா நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் புதுப்பித்தல்- 484 பில்லியன் ரூபா நிதி மூலதனம் – 229 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சகம் புதுப்பித்தல் – 382 பில்லியன் ரூபா நிதி மூலதனம் – 60 பில்லியன் ரூபா நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் புதுப்பித்தல் – 38 பில்லியன் ரூபா நிதி மூலதனம் – 16 பில்லியன் ரூபா சுகாதாரம் மற்றும் […]
காணிகளை கையகப்படுத்திக் கொண்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்குமாறு கோருவது நகைப்பிற்குரியது முடியாது – குகதாசன் எம்.பி
தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நேற்றும், அதற்கு முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது. எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் […]
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு !
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.



















