இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது. ’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் […]