ஜனாதிபதியின் க்கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று திங்கள் (6) இரவு மேற்கொள்ளப்பட்டது. கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் பிரதேச மில்லர் விளையாட்டுக் கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 100 லீற்றர் கசிப்பு,30 லீற்றர் கோடா,10 வெற்று வரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அவற்றினை பொதுமக்கள் முன்னிலையில் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.தகவல் அறிந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை.அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக கிண்ணையடி கிராமத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றினை அண்மித்த பிரதேசங்களில் இவ் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கை இடம்பெற்று வந்தது.இதனை தடுக்க எவரும் துணிந்து முன்வராத நிலைமை காணப்பட்டது. இதனால் பிரதேசத்தில் […]