அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.. #கேள்வி: நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அளவில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால், ஏனோ எனக்கு காதல் பிடிக்கவில்லை. எனக்கு இப்போது 34 வயது. இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த என் மனம், இப்போது சஞ்சலப்படுகிறது. நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். என் பிரச்னை என்னவென்றால், அவளுக்கு திருமணமாகி விட்டது. அவள் வயது 22. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்ற பின் தான், முதன் முதலில் அவளைப் பார்த்தேன். முதலில் இதை இனக்கவர்ச்சி என்று நினைத்தேன். ஆனால், அப்படியேதும் இல்லை என்று, நிச்சயமாக சொல்ல முடியும். அவளுடைய கணவன் கொஞ்சம் முன்கோபி. அதனால், அடிக்கடி அவளுக்கு அடி விழும். அவளை அரவணைக்க ஆள் இல்லாததால் தான், என்னை விரும்புகிறாளோ […]